உள்ளாட்சி தேர்தலில் கேதுவார்பட்டி 2 வது வார்டு உறுப்பினராக பி.முருகேசன் என்பவர் கட்டில் சின்னத்தில் போட்டியிட்டார்.இந்நிலையில் அவர் தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இதனால் அவர் தனக்கு வாக்களிக்காமல் தோற்கடித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்துள்ளார் அதில் " நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பார்க்கல " என்று அச்சடித்து தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறி உள்ளார்.