சோழபுரத்தில் ரூ 68 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்
திருப்பனந்தாள் அருகே சோழபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பழைய கட்டிடமாக இயங்கி வந்தது இந்த நிலையில் தமிழக அரசு சுகாதாரத்துறை மேம்பாட்டு நிதியில் கடந்த ஆண்டு ரூ 68 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு நேற்று இரண்டு மருத்துவர்கள் 6 படுக்கை வசதிகள் 3 செவிலியர்கள் நான்கு உதவியாளர்கள் உள்பட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் நிலவள வங்கி தலைவர் சோழபுரம் அறிவழகன் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கோவை மகாலிங்கம் முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அழகு த சின்னையன் நவீன வேளாண்மை விற்பனை போடு தலைவர் ஆசாத் அலி டாக்டர் புனிதா மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
" alt="" aria-hidden="true" />